ராஜேஸ்வரி_சாட்டர்ஜி சான்றோர்தினம்

0
194

கன்னட இலக்கிய உலகில் புகழ் பெற்ற கமலம்மா தாசப்பாவின் குடும்பத்தில், பழைய மைசூரில், நஞ்சன்கூடு பகுதியில் வழக்கறிஞராக இருந்த பி.எம்.சிவராமையாவின் மகளாக, 1922 ஜனவரி 24-ல் ராஜேஸ்வரி பிறந்தார்.பெங்களூரு மத்தியக் கல்லூரியில் கணிதத்தில் பி.எஸ்.சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தொடர்ந்து எம்.எஸ்.சி பட்டமும் பெற்றார். கர்நாடகத்தில் முதல் பெண் பொறியாளர் இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி ஆகிய பெருமைகளுக்கு உரியவர் ராஜேஸ்வரி சட்டர்ஜி. நுண்ணலைகள் (microwave engineering), உணர் பொறியியலில் (antennae engineering) அவர் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறார்.ஐ.எஸ்.சில் வேறு (மின்னியல்) துறையில் சேர்ந்த அவர், அங்கு திறம்படப் பணியாற்றினார். 1953 – ல் ஐ.ஐ.எஸ்.ல் பேராசிரியராகப் பணியாற்றி வந்த சிசிர்குமார் சட்டர்ஜியை, ராஜேஸ்வரி திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து நுண்ணலைப் பொறியியலில் (microwave engineering), ஆய்வுகள் நிகழ்த்தினர்.இத்துறையில் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதன்மை ஆய்வுகள் அவை. மிக விரைவில் நுண்ணலை ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தையும் அவர்கள் நிறுவினர். ஐ.ஐ.எஸ் ல் மின்காந்தவியல், மின்னணுக்குழாய் இணைப்புகள், நுண்ணலை பொறியியல் குறித்து அவர் பயிற்றுவித்து வந்தார்.அவரது வழிகாட்டலில் 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் உருவாகினர். தனது பணிக்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ராஜேஸ்வரி, நுண்ணலைகள், உணர் பொறியியலில் 6 நூல்களையும் எழுதியுள்ளார்.பெண்கள் பள்ளி செல்வதே அரிதாக இருந்த காலத்தில், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி வெளிநாடு சென்று உயர்படிப்பு பயின்றதுடன், ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அறிவியல் உலகில் எதிர்ப்புகளை மீறி நுழைந்து சாதனை படைத்தவர் ராஜேஸ்வரி சட்டர்ஜி.பிரிட்டனின் வானொலி பொறியியல் கழகம் மவுண்ட்பேட்டன் விருது வழங்கியுள்ளது. இந்திய பொறியாளர் சங்கம் ஜெகதீச சந்திர போஸ் விருது வழங்கி அவரைக் கௌரவித்தது.மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் பொறியாளர் சங்கம், ராம்லால் வாத்வா விருதும், மேகநாத் சாஹா விருதும் வழங்கியது. 2010, செப்டம்பர் 3ந் தேதி ராஜேஸ்வரி காலமானார். Elements of Microwave Engineering, Advanced microwave engineering, Antenna Theory and Practice உள்ளிட்ட அவரது நூல்கள் இத்துறையில் முன்னோடி நூல்களாக விளங்கி ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி வருகின்றன.
#rajeshwarichatterjee #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here