நேதாஜியின் கொள்கையும், தங்களது கொள்கையும் ஒன்றுதான் – ஆர்.எஸ்.எஸ். தலைவர்

0
287

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “நவீன இந்தியாவின் சிற்பிகளில் நேதாஜியும் ஒருவர். எனவே, அவரின் வாழ்க்கை மற்றும் திறன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நன்றியறிதலுடன் மட்டுமல்லாமல், அவரது குணங்கள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளை உள்வாங்குவதை உறுதிசெய்வதற்காகவும் நாம் அவரை நினைவுகூர வேண்டும்.
நேதாஜியின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. நமது தேசத்தில் பன்முகத்தன்மை இருந்த போதிலும், அவர் அனைத்து வேறுபாடுகளுக்கும் மேலாக நாட்டை முதன்மைப்படுத்தினார். நாட்டிற்காக இராணுவத்தை உருவாக்கி வழிநடத்தினார். இது நாட்டின் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. நேதாஜியின் கொள்கைக்கும், நமது கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here