தமிழகம் – கலைச்செம்மல் விருதுகள் 18 பேருக்கு அறிவிப்பு

0
1326

ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த, 18 கலைஞர்களுக்கு, தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின், ஓவிய நுண்கலை குழு வழியாக, ஆண்டுக்கு ஆறு கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருது, தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய, தேர்வாளர்கூட்டம், கலைபண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், 2021 – 22 முதல் 2023 – 24 வரை, மூன்று ஆண்டுகளுக்கு 18 கலைஞர்களை தேர்வு செய்தனர். மேலும், தமிழகம் முழுதும் கிராமிய கலைகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற, 15 இளம் கலைஞர்களுக்கு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தலைமையிலும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முன்னிலையிலும் நடைபெறும் இசை விழாவில் இக்கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here