மதுரை எஸ். சோமசுந்தரம் பிப்ரவரி 9, 1919 – ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர். இவர் மதுரை சோமு என்று அழைக்கப்பட்டார். பெற்றோர்கள் இவரை பரமசிவம் என்று அழைத்தனர். தனது இசைப் பயிற்சியை சேச பாகவதர், அபிராம சாஸ்திரி மற்றும் சித்தூர் சுப்ரமண்யம் பிள்ளை ஆகியோரிடமிருந்து பெற்றார். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை வீட்டில் 14 ஆண்டுகள் தங்கி இசைப் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் கச்சேரியை 1934 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் நிகழ்த்தினார். வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளிலும் சிறந்த பயிற்சி உடையவர். 1979 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார். மாதுலிகா, ஓம்காளி, வசீகரி, சோமப்பிரியா போன்ற இராகங்கள் இவர் உருவாக்கியவை. 1972 ஆம் ஆண்டில் வெளிவந்த தெய்வம் திரைப்படத்தில் மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலைப் பாடினார். “சஷ்டி விரதம்” என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.
#SSomasundaram #சான்றோர்தினம்