தேசத்தின் 5-வது பிரதமராக பணியாற்றிய சவுதாரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தமது எக்ஸ் பக்கத்தில், பாரதத்தின் சுதந்திரத்துக்காக தன்னை சுதந்திரப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். உப்பு சத்தியாகிரகம் போன்ற, அந்நியர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர். தேசத்தை இயக்கிய முன்னாள் அரசியல்வாதிகளின் தவறான பொருளாதார கொள்கையின் மீதான தனது மனம் திறந்த விமர்சனத்தை முன்வைத்தவர். தேசத்தின் 3-வது துணைப் பிரதமராகவும், 5-வது பிரதமராகவும் பணியாற்றிய, மரியாதைக்குரிய திரு.சவுதாரி சரண் சிங் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..! என பதிவிட்டுள்ளார்.