ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்திற்கு தடை

0
129

பாரதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தடை செய்து வருகிறது.
குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை பாரதத்தில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு தீவிரவாத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் குழுக்களை மத்திய அரசு கண்டறிந்து, அக்குழுவை சேர்ந்தவர்களை கைது செய்தும், தடை விதித்தும் வருகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, “ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத சங்கமாக அறிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவோர், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here