கடந்த பல நாட்களாக, சமூகத்தில் தப்பெண்ணம் மற்றும் குழப்பத்தை உருவாக்கும் ஒரு தவறான வீடியோ பதிவு (எந்த அரசியல் கட்சிக்கு சங்கத்தின் ஆதரவு?) சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகிறது.
இது போன்ற சமூக விரோதச் சிந்தனைகள் மாண்புமிகு நீதிமன்றத்தால் இதற்கு முன்னரும் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மீண்டும் நடக்கும் இந்தக் குற்றங்கள், தேர்தலுக்கு முன், உண்மை இல்லாத போலியான, அபத்தமான விஷயங்களைப் பரப்பி, சமூகத்தில் பிளவையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, குழப்பமான சூழ்நிலையை உருவாக்குகின்றன.
இன்று இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் (தேர்தல் அதிகாரி, நாக்பூர்) மற்றும் போலீஸ் கமிஷனர் (நாக்பூர்) ஆகியோருக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க நாக்பூர் மகாநகர் காரியவாஹ் மூலம் புகார் கடிதம் வழங்கப்பட்டது.