ஏ.பி.வி.பி கண்டனம்

0
113

கருத்துரிமை, ஊடக சுதந்திரம் என்ற போர்வையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு புறம்பாக பி.பி.சி தயாரித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தை மத்திய அரசு அண்மையில் தடைசெய்தது. தடை செய்யப்பட்ட அந்த ஆவனப் படத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியர் சாம்வேல் ஆசிர்ராஜ், மாணவர்கள் மத்தியில் திரையிட்டார், இடதுசாரிகள் ஆதரவு இந்திய மாணவர் சங்கமான எஸ்.எப்.ஐ சார்பாக மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக விடுதியில் இந்த ஆவனப்படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியில் இந்திய அரசு, மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பாரதப் பிரதமருக்கு எதிரான பி.பி.சி ஆவணப் படமானது 30.01.2023 அன்று திரையிடப்பட்டு உள்ளது. மாணவர்களை தேசத்திற்கெதிரான செயல்களிலும், தேச விரோத எண்ணங்களை விதைக்கும் விதமாகவும் தடை செய்யப்பட்ட ஆவணப் படத்தை திரையிட தூண்டுதலாக இருந்த விடுதி மேலாளர், உறுதுணையாக விளங்கிய பேராசிரியர் சாமுவேல், அசீர்ராஜ் மற்றும் பிற பேராசிரியர்கள் மீதும் எஸ்.எப்.ஐ மாணவ அமைப்பினர் மீதும் அதன் பொறுப்பாளரான குற்றவியல் துறை மாணவர் சூர்ய குமார் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சாமுவேல், அசீர்ராஜ் இந்த திரைப்படத்தை 25.01.2023 அன்று வகுப்பறையில், மாணவ, மாணவிகளுக்கு காண்பித்துள்ளார். இதுபோல தேசத்திற்கு எதிரான பிரிவினையை ஏற்படுத்தும் செயல்கள் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தீவிரவாத கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதால், ஏ.பி.வி.பி இச்செயலை வன்மையாக கண்டிக்கிரது. எனவே, இந்த செயலில் ஈடுபட்ட மணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்” என ஏ.பி.வி.பி’யின் மாநில இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here