தீண்டாமைக்கு எதிராக போராடிய ஜெகசீவன்ராம் பிறந்த தினம் இன்று

0
206

ஏப்ரல் 5, 1908 பீகார் மாநிலத்தில், பிறந்தவர். 1928 ஆம் ஆண்டில் வாரணாசியில் உள்ள பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும், பின்னர் 1931-இல் கல்கத்தா பல்கலை கழகத்திலும் படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி. இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர். ஜெகஜீவன் ராம் பட்டியலினத்தில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. அதனைக் கண்டு அவர் வருத்தமும், சினமும் அடைந்தார். அந்தப் பானையை உடைத்தார். பிறசாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்
என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். உணவு விடுதியில் பணியாளர்கள் இவர் சாப்பிட்ட உணவுத் தட்டுகளைக் கழுவ மறுத்தார்கள். அது மட்டுமல்லாமல் முடி திருத்தும் தொழிலாளிகள் முடி திருத்த மறுத்தார்கள். பட்டியல் சமுகத்தினர் கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். 1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். பட்டியல் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here