மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று

0
94
மங்கள் பாண்டே 1827 ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
1849 ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், 34வது நேட்டிவ் பெங்கால் இன்பான்ரியில் ஆறாவது கம்பெனியில் சிப்பாயாக சேர்ந்தார்.
சிப்பாய்க் கலகம் என்று அப்போது பிரிட்டாஷாராலும், பின்னாளில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அறியப்பட்ட 1857 கலகம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது மங்கள் பாண்டே
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் தட்டி எழுப்பி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடுங்க வைத்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் பற்றிய உண்மையான தகவல்களை அடக்கிவைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பெருமளவு முயற்சி செய்தது.
1857 இல் நடந்த சிப்பாய் கலகம் என்ற புரட்சியை ‘இந்திய சுதந்திரப் போர்’ என்று அழைக்கக் கூடாது என்று தடை இருந்தது.
பிரிட்டிஷார் அஞ்சியது வீண்போகவில்லை.மே மாத கடைசியில் மீரட்டில் தொடங்கிய சிப்பாய்க்கலகம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. 1858 வரை நீடித்த கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும், இது ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்திய வரலாற்றில் அமைந்தது.
கிழக்கிந்திய கம்பெனியை , பிரிட்டிஷ் அரசாங்கம் கலைத்து, நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா முடிசூட்டிக் கொண்டார். இந்திய அரசுச் சட்டம் 1858 நடைமுறைக்கு வந்தது.
1984-ல் மங்கள் பாண்டே வை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு ஒரு தபால் தலை வெளியிட்டது. 2005இல் அவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து Mangal Pandey: The Rising என்ற திரைப்படமும் நாடகமும் வெளிவந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here