19வது ஆசிய விளையாட்டு போட்டியில் பாரதத்திற்கு இதுவரை 19 பதக்கங்கள்

0
186

சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்கிறது. இது வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது. இதன்மூமல் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 25 மீ., மகளிர் ரேபிட் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர், ஈஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளது. 50 மீ., ரைபிள்-3 பிரிவில் ஆஷி சவுக்சி, மானினி கவுஷிக் மற்றும் சிப்த் கவுர் சாம்ரா அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது. தனிநபர் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள்- 3 பிரிவில் இந்தியாவின் சிப்த் கவுர் சாம்ரா தங்கப் பதக்கமும், ஆஷி சவுக்சி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 19 (5 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம்) ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here