மயிலப்பன் சேர்வைகாரர் பலிதான தினம்

0
89
ராமநாதபுரம் முத்துவடுகநாதரின் ஒரு படைப்பிரிவின் தலைவர். தென் பகுதியை சேர்ந்த ஆப்பனூர் நாட்டைச்சேர்ந்த சித்திரங்குடியை சார்ந்ததால் சித்திரங்குடி மயிலப்பன் என அழைக்கப்பட்டார்.  கெடுபிடி வசூல் செய்து, சுரண்டிய பிரிட்டிஷாரை எதிர்த்த குடிமக்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார்.  1799, ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள பிரிட்டிஷாரின் கச்சேரியைத் (நீதிமன்றத்தை) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியையும், கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கி துணிகளை சூறையிட்டது, கமுதியில் உள்ள கச்சேரியைத் தகர்த்து பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது என தொடர்ந்த போராட்டங்களால் ஆங்கிலேய நிர்வாகம் கதி கலங்கியது.  ஆனால் போராட்டத்தை அடக்கிய ஆங்கிலேயர் மயிலப்பனை தேடினர். சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார்.  எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பி, சிவகங்கை சீமையின் மருதிருவரின் அணியில் சேர்ந்து ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக செயல் பட்டார்.  கலெக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்தரவை மதிக்கவில்லை.  மருதிருவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். பிரிட்டிஷ் கிறிஸ்தவரின் வெகுமதிக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு மூன்று மாத கடுமையான சிறைக்குப் பின் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாள் அபிராமத்தில் தூக்கிலிப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here