சமஸ்கிருதத்தை நவீன அறிவியல் கல்வி உள்பட அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்!

0
109

சமஸ்கிருத தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத மொழிக்காக சேவையாற்றிய சீனிவாச ஆச்சாரியாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது புனித ரிஷிக்கள், ஒரே குடும்பம், ஒரே உலகம் என்ற நல்ல நோக்கத்தைக் கற்றுத் தந்ததாக கூறினார்.

மேலும், தற்போதைய பெஷாவர் முதல் பர்மா வரையிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் பாரதம் பரவியிருந்ததாக கூறிய ஆளுநர், அப்போது சமஸ்கிருதம்தான் பயன்பாட்டு மொழியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here