ஈரோடு அருகே சேவா பாரதி, நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை!

0
110

நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மற்றும் சேவா பாரதி அமைப்பினர் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் குமாரசாமி, நந்தா கல்வி குழுமத்தின் தலைவர் சண்முகம் மற்றும் தனியார் நிதி நிறுவன மேலாளர் அவித்ஷா ஆகியோர் பங்கேற்று இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சேவா பாரதி மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையின் மூலமாக ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சேவா பாரதி தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here