ராயணத்தில் பல்வேறு வகைக் காடுகள் பற்றியும் அங்கு காணப்படும் தாவரங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார் வால்மீகி. காடுகள் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கே வால்மீகியின் குறிப்புகள் பெரும் வியப்பினைத் தருகிறது.
ராமாயணத்தில் வால்மீகி குறிப்பிட்டுள்ள காடுகள், தாவரங்கள் பற்றி ஆய்வாளர்கள் பல்வேறு கட்டுரைகள் வெளியீடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
182 வகையான மரங்கள், செடிகள் பற்றி ராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. வேறு எந்த காவியத்திலும் இந்த எண்ணிக் கையில் காடுகள் குறிப்பிடப்படவில்லை.
பாரத தேசத்தின் நிலப்பரப்பு, அங்குள்ள காடுகள் பற்றி வால்மீகி நன்கு அறிந்துள் ளார். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிட் டுள்ள காடுகள், மலைகள் இன்றும் உள்ளன.