முதலில் வங்கத்தில் நடந்த, மதவாத வன்முறைகளுக்கு எதிராகவும், அதன் பின் பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்டு வந்த ஹிந்து அகதிகளின் கதைகளைக் கேட்டு, டில்லியில் தோன்றிய பிரதி விளைவுகளையும், எதிர்த்து காந்திஜி உண்ணா விரதம் என்ற ஆயுதத்தைத் துணிச்சலுடன் கையிலெடுத்தார். ஓரளவு பலனும் கிடைத்தது.
ஆனால் சுதந்திர பாரதத்தின் துவக்க மாதங்களில், காந்திஜியின் கவலைகள் மதவாத வன்முறை பற்றி மட்டும் இருக்கவில்லை. அழுகிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிதான் அவர் ஆழ்ந்து கவலைப்பட்டார். காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர்கள், தொழில் துவங்குதற்கான லைசன்ஸ் வழங்குவதற்கு வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியது பற்றியும், கருப்பு சந்தையில் ஈடுபடுவதையும், நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதையும், அரசு உயரதிகாரிகளை மிரட்டித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெறுவதையும் கேள்விப்பட்டு வருந்தினார். அபாயகரமான இந்த நிலைக்குத் தீர்வு என்ன என்று தீர யோசித்தார்.
காந்திஜி தன்னால் ஆரம்பிக்கப்பட்ட அல்லது தொடர்புடைய, சில தன்னாட்சி அமைப்புகளின் பொறுப்பாளர்களை அழைத்து, டில்லியில் ஒரு மாநாடு நடத்தினார். அகில இந்திய நூற்பாளர்களின் அசோசியேசன், ஹரிஜன சேவா சங்கம், வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன், கோசேவா சங்கம், புதிய கல்வி சொசைட்டி போன்ற அமைப்புகள் அதில் அடக்கம். ஜாகிர் உசைனும், ஆசார்ய கிருபளானியும் கலந்து கொண்டார்கள்.
மாநாட்டில் காந்திஜி, மேற்கண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி, ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப் போவதாகவும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகளை, அந்தக் குழு ஆய்ந்து, அவர்களின் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவை பற்றி சான்றளிப்பார்கள் என்றும் கூறினார். அவர்கள் கொடுக்கும் சான்றுகளின் அடிப்படையில், வாக்காளர்கள் தேசத்தின் அரசியல் தளங்களில் தங்களுடைய குரலை வெளிப்படுத்த, தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றார். ஆனால் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டிருந்த, அவர்களில் பெரும்பாலோர் அரசியலிலிருந்து தூர ஒதுங்கியிருக்க நினைத்தார்கள். சிலர் நேரடியாக தேர்தல்களில் தாமே கலந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்கள். ஆக காந்திஜி மாநாட்டில் தெரிவித்த யோசனைகள் யாரையும் கவரவில்லை.
அந்த மாநாட்டுக்குப் பின்னர், தன்னை அடியொற்றி நடப்பதாகக் கூறிக் கொள்பவர்களிடமிருந்தும் தான் தனிமைப் படுத்தப்படுவதாக காந்திஜி உணர்ந்தார். தன்னுடைய தோழர்களே, தங்களுடைய சுய அரசியல் லாபங்களுக்காகவே தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என உணர்ந்து, காந்திஜி ஒரு புரட்சிகரமான திட்டத்தைத் தயார் செய்தார். அந்த திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸைக் கலைத்துவிடவேண்டும். அதற்கு மாற்றாக ‘லோக சேவா சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த சங்கத்துக்கான சட்டதிட்டங்களையும் காந்திஜி உருவாக்கினார். அதை காங்கிரஸின் பெருந்தலைவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்ததால், கொலைகாரனின் குண்டுகளுக்கு அவர் இரையானதால், காந்திஜியின் திட்டம் நிறைவேறவில்லை.
INDIA from Curzon to Nehru and After (Author Durga Das) என்ற நூலிலிருந்து
Lok Sevak Sangh
[On 29th January, 1948, a day before he passed away, Gandhiji had drafted a constitution for the Lok Sevak Sangh, or association of servants of the people, into which he wanted the Indian National Congress to dissolve itself, and he drew up the following among qualifications for those who would be its members:]
Every worker shall be a habitual wearer of Khadi made from self-spun yarn or certified by the A-I.S.A. and must be a teetotaller. If a Hindu, he must have abjured untouchability in any shape or form in his own person or in his family, and must be a believer in the ideal of inter-communal unity, equal respect and regard for all religions, and equality of opportunity and status for all irrespective of race, creed or sex.
He shall come in personal contact with every villager within his jurisdiction.
He shall enrol and train workers from amongst the villagers and keep a register of all these.
He shall keep a record of his work from day to day.
He shall organize the villages so as to make them self-contained and self-supporting through their agriculture and handicrafts.
He shall educate the village folk in sanitation and hygiene and take all measures for prevention of ill health and disease among them.
He shall organize the education of the village folk from birth to death along the lines of Nai Talim, in accordance with the policy laid down by the Hindustani Talimi Sangh.
Harijan, 15-2-1948
விவேகானந்தன் ஜி