ராஜேந்திர சோழன் கட்டிய பழமை வாய்ந்த கோவிலின் நிலை தற்போது இந்த நிலையா?

0
1075

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள வருமானம் இல்லாத கோவில்களையும், சொற்ப வருமானம் உள்ள கோவில்களையும் பெருமளவில் கண்டு கொள்வது இல்லை. அது தற்போது தஞ்சாவூர் அருகேவும் கண்கூட காண நேரிடுகிறது.


தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மானம்பாடி எனும் சிற்றூரில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராஜேந்திர சோழன் காலத்திய கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோவிலின் பெயர் நாகநாதசாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இக்கோவில் மதில் சுவர் இடித்து தள்ளப்பட்டது. பின்னர் சில நல்லுள்ளங்களின் முயற்சியில் இது மீண்டும் கட்டப்பட்டது. எந்த பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து இருக்கும் இக்கோவிலை முழுவதும் அப்புறப்படுத்தும் விதமாக மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி உள்ளது.

நாட்டின் வரலாற்று பொக்கிஷம் என்ற அக்கறை கூட இல்லாமல். அறநிலையத்துறை மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும். பழமை மாறாமல் அக்கோயிலை புனரமைத்து தர வேண்டும் எனவும் ஹிந்துக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here