டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்றவர்கள் கைது. அவர்கள் பின்னணி பயங்கவாத அமைப்பு என தெரிய வந்துள்ளது.
டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்ற ஷெலகத் அகமது, முகமது ஜுபார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு மாதத்தில் சோபூரிலிருந்து டெல்லிக்கு 6 முறை விமானத்தில் வந்து காரைத் திருடி காஷ்மீருக்கு ஓட்டி சென்று அங்கு விற்றுள்ளனர். அவர்களின் செல்போன்களை ஆராய்ந்ததில் ஆயுதங்கள், டிரோன்கள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள், பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் இருப்பது தெரிந்தது.
மேலும், அகமதுவின் உடலின் பல தீக்காயங்கள் இருந்தன. அது வெடிபொருட்களால் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, காஷ்மீரின் பாகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இந்த இருவருக்கும் காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து தில்லி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.