ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அமைச்சர்களிடம் மனு அளித்தனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.
தமிழக மக்கள் நலன் காக்க, தமிழக அரசு ஒத்துழைப்புடன், ஸ்டெர்லைட் ஆலை இதுவரை, 1,882.74 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது. இதன் வழியே, ஒப்பந்த தொழிலாளர்கள், 300 பேருக்கு வேலை கிடைத்து, அவர்களின் வாழ்வாதாரம் சற்று உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று, மூன்றாம் அலை வாயிலாக பரவ தயாராகி வருகிறது. தமிழக மக்களின் உயிர் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து இயங்க, தாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். தற்போது அந்த தொழிற்சங்க நிர்வாகிகளே அதனை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது திமுக தான் அரசியல் செய்வதற்காக ஆலையை மூடுமா? இல்லை ஆலையை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்குமா?