முத்ரா கடன் தமிழகம் முதலிடம்

0
1263

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக பிரதமர் மோடியால் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது ‘முத்ரா யோஜனா’ திட்டம் . இத்திட்டத்தின் கீழ், தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, சிஷு திட்டத்தில் ரூ. 50,000 வரையிலும், கிஷோர் திட்டத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரையிலும், தருண் திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதுவரை நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இதில் பயனடைந்துள்ளனர். 15.97 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த முத்ரா திட்டத்தின் மூலம் பாரதத்திலேயே அதிகமாக தமிழகத்திற்கு ரூ. 63,150 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் 1.20 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என மத்திய அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here