உலக புகழ்பெற்ற திருப்பதியில், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, மிக எளிதில் உரமாகக் கூடிய பசுமை பைகளின் விற்பனை தற்போது துவங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம். அந்த லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் கவர்கள், 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது. தற்போது பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்ல முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால் அதற்கு மாற்றாக லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்கி உரமாகும் தன்மை வாய்ந்த மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய லட்டு பைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அதன் விற்பனை திருமலையில் நேற்று துவங்கப்பட்டது.