ஒரு வங்கி திவால் ஆனால், அதில் ‘டெபாசிட்’ செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, காப்பிட்டுதொகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்ததை 5 லட்சமாக அதிகரித்து அறிவித்தது மத்திய அரசு. இந்த சட்ட திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி திவால் ஆனால், டெபாசிட் தொகை வைத்து இருந்த வாடிக்கையாளர்களுக்கு, ஒரு லட்சம் வரை காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்து இருந்தது. அதனை 5 லட்சம் ரூபாய் வரை, 90 நாட்களுக்குள்ளாக கிடைக்கும் என சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனால் திவால் ஆன வங்கியின் கணக்குகளை பெற்று, அவற்றை எந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை எல்லாம் கண்டறிய, முதல் 45 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இதன் பிறகு, உரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, 90வது நாளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்.
தற்போது வரை, வைப்புத் தொகைக்கான காப்பீட்டை பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரைகூட ஆகும் நிலைதான் இருந்தது. ஆனால் இனி 90 நாட்களில் பணத்தை பெற்றுவிட முடியும். இன்றைய தேதியில் ஒரு வங்கி முடக்கப்பட்டால், அதன் வாடிக்கையாளருக்கு நவம்பர் 30ம் தேதி, காப்பீட்டு தொகை கைக்கு வந்துவிடும். ஒவ்வொரு வங்கியும், அதன் 100 ரூபாய் வைப்புத் தொகைக்கு, 10 பைசாவை காப்பீட்டுக்கான பிரீமியமாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.