பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னால் அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ ஸ்ரீ கணேசன் ஜி, மாநில துணைத் தலைவர் ஸ்ரீ வைத்தியநாத ஜி, கோட்ட செயலாளர் அன்பில் அன்பரசு ஜி, மாநில செய்தி தொடர்பாளர் வீரசேகரன் ஜி,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.