எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு – நாடாளமன்றத்தில் ராஜ்நாத்சிங் அறிக்கை

0
93

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டதாக நாடாளமன்றத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளமரத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது:
சீன ராணுவத்தினருடன் தவாங் மோதலில் நமது ராணுவ வீரர்களுக்கு உயிரிழப்போ, பலத்த காயமோ ஏற்படவில்லை. சீன ராணுவம் ஊடுருவிய முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்திய வீரர்கள் மிகுந்த வீரத்துடன் சீன ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்தினர். இந்திய ராணுவத்தினருடன் மோதலில் இந்திய வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர். சீன வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய வீரர்கள் காயம் அடைந்த போதிலும் சீன வீரர்களை அவர்களது முகாமுக்கு திருப்பி அனுப்பும் வகையில் பதிலடி கொடுத்தனர்.
எல்லையில் எந்த அத்து மீறல் முயற்சியையும் தடுக்க நமது படைகள் எப்போதும் தயாராக உள்ளது. நமது ராணுவ வீரர்களின் திறமை, வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சபை மதிக்கும் என்று நம்புகிறேன். இந்த மோதலுக்கு பிறகு இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் ஆலோசனை நடைபெற்றது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here