உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்கள் அவமதித்த கரணத்தால் கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமின் மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘ஹிந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், இதிகாச காப்பியங்களான ராமாயணம், மகபாரதம், பகவத் கீதை, அவற்றை எழுதிய மகரிஷி வால்மீகி, மகரிஷி வேத வியாசர் ஆகியோர் போற்றப்பட வேண்டும். நம் தேசத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அவர்களுக்கு தேசிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். நமது பாரதக் கலாசாரத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும். ‘ராமர் நம் கலாசாரத்தின் ஆன்மா. ராமர் இல்லாமல் பாரதம் முழுமை பெறாது’ என அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒருவர் நாத்திகராக இருக்க அரசியல் சாசனம் முழு அனுமதி அளித்துள்ளது. ஆனல், மதங்களை இழிவுபடுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. தான் வாழும் நாட்டின் கலாசாரம், கடவுள்களை மக்கள் அவசியம் மதிக்க வேண்டும். அவதுாறு கருத்துகள் தெரிவிக்கக் கூடாது. மதத்தை இழிவுபடுத்துவோருக்கு எதிராக பல நாடுகளில் கடுமையான தண்டனை வழங்க சட்டம் உள்ளது’ என தெரிவித்துள்ளது.