புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளுடனான பாரதத்தின் உறவை வலுப்படுத்துவது, பாரதத்தின் ஏற்றுமதியை உயர்த்துவது, சுற்றுலாவை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிட்டு உத்தர பிரதேசம் குஷி நகரில் பாரதப் பிரதமர் மோடி சர்வதேச விமான நிலையத்தை துவக்கி வைத்தார். இதனையொட்டி சுற்றுலா அமைச்சகம் இரண்டு நாள் சுற்றுலா மாநாட்டை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, தேசிய சுற்றுலா கொள்கை விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும் இதில் அரசோடு இணைந்து பணியாற்றவும், சர்வதேச அளவில் சுற்றுலாத் துறையில் பாரதத்தின் மதிப்பை உயர்த்தவும் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும், அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.