ஏ.பி.ஜி.பி நுகர்வோர் சங்கமம்

0
1687

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) அமைப்பு கடந்த 47 வருடங்களாக 842 கிளைகளுடன் தேசம் முழுவதும் உள்ள நுகர்வோரின் நலனுக்காக செயல்பட்டு வரும் அமைப்பு. இந்த அமைப்பின் மதுரை நுகர்வோர் சங்கமம் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 23 அன்று மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஏ.பி.ஜி.பி அமைப்பின் பொறுப்பாளர்கள் எம்.என் சுந்தர், குலோத்துங்க மணியன், விவேகானந்தன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நடுவர் தெய்வராஜ் பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட கண்ணன், சங்கர், கோவிந்தராஜ், லீலாவதி, ரம்யா, மரகதவள்ளி ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here