உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் இருந்த அன்னபூரணி தேவியின் சிலையை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல்காரர்கள் வெளிநாட்டுக்கு கடத்திச்சென்றுவிட்டனர். அந்த சிலை கனடாவின் ஒட்டாவா நகரிலிருந்து மீட்கப்பட்டு கடந்த 15ம் தேதி பாரதம் கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் (ஏ.எஸ்.ஐ) தங்கள் வசம் பெற்றனர். இந்த சிலை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் என மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்தார். முன்னதாக, இந்த சிலையை மீட்டெடுத்து பாரதத்திற்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.