புதுப்பிக்கப்பட்ட தொடர்புகள்

0
93

வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில், காசி தமிழ் சங்கமத்தின் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கிடையே பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,500 பேர் காசிக்கு வருகின்றனர்.இந்த நிகழ்வில் விளையாட்டுகளையும் சேர்த்து இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ விளையாட்டுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.ஒரு விளையாட்டில் தோல்வி அல்லது வெற்றி என்பது முக்கியமல்ல, இந்த நட்பு போட்டி ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள உதவும்.மொழி தெரியாவிட்டாலும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடியும்.இந்த அமிர்த காலத்தின் போது, நாம் உரிமைகளைத் தேடுவது மட்டுமல்லாமல் பொறுப்புகளையும் நாம் ஏற்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம்.வாரணாசியில் கடந்த எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இதற்கு முன் எப்போதும் செய்யப்பட்டதில்லை.இந்த வளர்ச்சி வாரணாசியில் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதும் உள்ளது.காசி தமிழ் சங்கமம் பற்றி கூட முன்பு யாரும் யோசிக்கவில்லை.காசியுடன் தொடர்புடைய வகையில் தமிழகத்தில் தென்காசி, சிவகாசி என ஏராளமான ஊர்கள் உள்ளன.இது ஆரம்பம்தான்.இப்போது காசிக்கு வந்த 2,500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள்.காசியுடன் தொடர்புடைய தமிழகத்தின் தென்காசி, சிவகாசி போன்ற இடங்களுக்குச் உத்தரப் பிரதேச மக்களும் செல்ல வேண்டும்.காசி மற்றும் சிவகாசியில் உள்ள கலாச்சாரம், சடங்குகள், பெயர்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.தமிழகத்தின் பல ஊர்களுடன் காசிக்கு பாரம்பரிய தொடர்பு உண்டு.இந்த பழமையான வரலாற்று, கலாச்சார, ஆன்மீக தொடர்புகள் பிரதமரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.சோம்நாத், கேதார்நாத் மற்றும் அயோத்தியில் உள்ள கோயில்களை பிரமாண்டமாகவும், தெய்வீகமாகவும் பிரதமர் உருவாக்கியுள்ளார்.அதேபோல் காசியை விஸ்வ திவ்ய பவ்ய காசியாக மாற்றுவார்.இதனால் இப்பகுதியின் சுற்றுலா அதிகரித்துள்ளது” என கூறினார்.மணிப்பூர் ஆளுநர் இல கணேசன், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here