உலகை வலம் வரும் யு.பி.ஐ

0
1013

ஒரு காலத்தில் வெளிநாட்டு சேவைகள்தான் பாரதத்தில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பாரதத்தின் பல சேவைகளும் உலக நாடுகளுக்கு பயணிக்கிறது. யு.பி.ஐ, கோவின் செயலி என பலவற்றை இதற்கு உதாரணம் சொல்லலாம். அவ்வகையில், பாரதத்தின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவையான யூ.பி.ஐ தளத்தை ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பயன்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் இந்தியா மற்றும் குளோபல் டிஜிட்டல் காமர்ஸ் நெட்வொர்க் இண்டர்நேஷனல் ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில் ஐக்கிய அரபு நாடுகளில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த மொபைல் பேமெண்ட் தளத்தை அறிமுகம் செய்யப்படும். இனி ஐக்கிய அரபு நாடுகளில் வங்கி, நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், சூப்பர் மார்கெட் என அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ செயலியை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். உலகிலேயே ரியல் டைம் பேமெண்ட் பிரிவில் மிகவும் வெற்றிகரமாகவும் எளிமையான கட்டமைப்புடன், பாதுகாப்புடனும் விளங்கும் ஒரு பேமெண்ட் தளம் என்றால் அது யூ.பி.ஐ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here