ஹிந்து இனப்படுகொலை 2021, தொடர்-5

0
695

ஹிந்து இனப்படுகொலை 2021,
தொடர்-5
(இத்தொடர் வீரமுள்ள இந்துக்களுக்கான விழிப்புணர்வு தொடர்)

இஸ்கான் தாக்குதல்

பங்களாதேஷின் நோக்கலி மாவட்டத்தில்
அக்டோபர் 13 அஷ்டமி பூஜை இரவிலிருந்து இரண்டு நாட்களாக இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் பல்வேறு ஹிந்து கோவில்கள் பூஜா பந்தல்களை நிர்மூலம் ஆக்கினர். நோக்கலில் உள்ள இஸ்கான் கோவிலை இந்த இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் குறிவைத்தனர். அக்டோபர் 15 பகல் பொழுதில் இந்த பயங்கரவாத கும்பல் இஸ்கான் கோவிலை தாக்கினர். சௌமுகனி பகுதியிலுள்ள இந்த அழகான ஆலயம் முஸ்லிம் கும்பலால் சிதைந்தன.
தைரியமான கிருஷ்ண பக்தர் பார்த்த சந்திரதாஸ் அவர்கள் இந்த முஸ்லீம் பயங்கரவாத தாக்குதலை தடுக்க முற்பட்டார் கொடூரமான முறையில் கோவில் வளாகத்துக்குளே கொல்லப்பட்டார் என்பது மிகவும் வருந்தத்தக்கது.
மறுநாள் காலையில் அருகில் உள்ள குட்டையில் மற்றொரு சன்னியாசியின் உடல் கண்டெடுக்கப்பட்டன. இந்த இஸ்கான் ஆலயத்தில் நான்கு சன்யாசிகள் என்ன ஆனார்கள் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இந்த இஸ்லாமிய பயங்கரவாத இரக்கமற்ற தாக்குதல் குறித்து அங்கு உள்ள பரேஸ் சங்கரதாஸ் சன்னியாசி
“இந்த துக்க நாளில் நான் உயிரோடு இருப்பது கிருஷ்ண பகவானின் கருணையே. ஆனால் என்னுடன் இருந்த சன்யாசிகள் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்டார்கள். நாங்கள் காணாமல்போன நான்கு சன்னியாசிகளை குறித்து கவலையுடன் இருக்கின்றோம்” என்று புலம்பினார். பயங்கரவாத முஸ்லிம் கும்பல் தாக்கும்போது இஸ்கான் ஆலயத்தில் 20 சன்யாசிகள் இருந்ததாக அவர் கூறுகிறார். கோவிலுக்குள் இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்கள் இரும்பு கம்பிகள் மூங்கில் கம்புகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கோவிலில் இருந்த ஒவ்வொன்றையும் அடித்து நொறுக்கினர். இந்த கும்பல்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததால் சன்னியாசிகள் தடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இந்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பல் கோயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கி அங்கு உள்ள பழங்களையும் பொருள்களையும் உடமைகளையும் களவாடி சென்றனர். அங்குள்ள புத்தக நிலையத்தையும் அடித்து நொறுக்கி புனித புத்தகங்களை அளித்தனர். இந்த குண்டர்கள் கோவிலின் மூல விக்கிரகத்தை தகர்க்க நுழைந்தனர். அதனைத் தடுக்க முற்பட்ட ஒரு கிருஷ்ண பக்தர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார் மற்றொருவர் கடத்தப்பட்டார் இந்த கடத்தப்பட்ட சந்நியாசியின் உடல் அருகில் உள்ள குளக்கரையில் மறுநாள் காலையில் கிடந்தது. இந்த பயங்கரவாத கும்பல் தொடர்ந்து கோயில்களை நாசம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here