பயங்கரவாதிகளுடனான மோதலில் காயமடைந்த ராணுவ நாய் வீரமரணம்

0
164

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுடனான மோதலில் குண்டடிப்பட்டு காயமடைந்த ராணுவ நாய் ‘ஜூம்’, சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தது.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஆனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் ‘ஜூம்’ என்றழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றுள்ளது.

இந்த மோதலில், பயங்கரவாதிகளுக்கிடையேயான தாக்குதலில் ராணுவ நாய் ஜூம் குண்டடிபட்டு காயமடைந்துள்ளது. நாய் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தது. இருப்பினும், இந்த நாயின் பணி காரணமாக 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

காயமடைந்த ஜூம் நாய்க்கு, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என டாக்டர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 11:45 மணி வரை நாயின் உடல்நிலை நன்றாக இருந்த நிலையில், பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து 12 மணியளவில் வீரமரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் எடுத்த பல நடவடிக்கைகளில் ஜூம் பங்கேற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here