தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து இயக்கங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0
646
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நகரத் தலைவரின் மரக்கடை சமீபத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் எரிக்கப்பட்டது. இந்த அராஜக சம்பவம் நடந்து 43 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை தமிழக அரசின் காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வரும் டிசம்பர் 31க்குள் கைது செய்ய வேண்டும் என வி.ஹெச்.பி உட்பட ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் ஹிந்துக்களுக்கு எதிரான அநீதிகளை, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, இந்து முன்னணி, பா.ஜ.க அமைப்புகளை சேர்ந்த உயர் மட்டக்குழுவினர் எடுத்துரைத்தனர். இதற்கு தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here