காசி விஸ்வநாத் கோவிலின் வழித்தடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

0
244

         கோயில் நகரமான காசியில் ரூ.339 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த வழித்தடம் திட்டமிட்டபடி மூன்று ஆண்டுகளில் முடிக்கப்ப்ட்டுளது. கோவிட் பெறும் தொற்று பிரச்சினைகள் இருந்த போதிலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

        பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாரணாசியில் தனது இரண்டு நாள் பயணத்தின் போது காசி விஸ்வநாத் வழித்தடத்தை திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். துப்புரவு, புதுமை மற்றும் ஆத்மநிர்பர் பாரத் (தன்னம்பிக்கை இந்தியா) ஆகியவற்றில் இந்தியர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

        முன்னதாக, பிரதமர் மோடி கங்கை நதியில் புனித நீராடி, பிரார்த்தனை செய்தார். வாரணாசியில் விமானத்தில் வந்திறங்கிய அவரை  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.  வாரணாசி மக்களவைத் தொகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் கோவில் நகரத்தின் ரூ 339 கோடி திட்டமானது, மார்ச் 8, 2019 அன்று மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது, கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், திட்டமிட்டபடி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here