மாணவர்கள் இனி கல்வி கடனுக்காக வங்கி வாசலில் காத்திருக்க தேவை இல்லை.

2
544

பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற மாணவர்கள் வாங்கி வாசலில் நெடுநேரம் காத்திருக்கும் சூழ்நிலையை நாம் பார்த்திருப்போம். இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்.

கல்விக்கடனுக்காகவே மத்திய அரசு ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஆதலால், இனிமேல் 12-ஆம் வகுப்பு (+2) முடித்த மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டபடிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்கவும் கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்” என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

2 COMMENTS

  1. What’s up everyone, it’s my first pay a visit at this site, and article is actually fruitful designed for me,
    keep up posting these articles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here