பாரத தேசத்தை குலைக்கும் நோக்கில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுனர்.
லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து கிளம்பி வங்கதேசம், நேபாளம் வழியாக சட்ட விரோதமாக நமது நாட்டிற்குள் ஊடுருவி இன்று நாடெங்கும் பரவி வசித்து வருகின்றனர். இவர்கள் போலி செக்யூலர் அரசியல்வாதிகள் உதவியுடன் ரேஷன், ஆதார் அட்டை பெற்றுள்ளனர். வாக்கு வங்கிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளால் வாக்காளர் பட்டியலில் இவர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது.
சட்ட விரோதமாக ஊடுருவி உள்ள இவர்களைக் கண்டறிந்து நாட்டை விட்டு வெளியேற்றிட மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றனர். ஆனால் மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் இவர்களை கண்டறிந்து கைது செய்து விசாரித்து வருகிறது.
அதனடிப்படையில் இன்று உத்திரபிரதேசம் மீரட் புலந்த்சகர் பகுதியில் வசித்து வந்த 4 ரோஹிங்கியாக்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஹவாலா பரிமாற்றத்திலும் மற்ற சில தேச விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.