கோவா… நாம் அறியாததும் அறிய வேண்டியதும்.

0
248

கோவா சென்று வந்த சுற்றுலாப் பயணியைக் கேளுங்கள்,…. என்னென்ன பார்த்தீர்கள்? –என்றால் “பல்வேறு பீச்சுகள், சர்ச்சுகள், மண்டோவி நதிப் பாலம், பார் & ரெஸ்டாரன்ட், ஃபென்னி பானம், முந்திரிப் பருப்பு…” என்று பதிலளிப்பார்கள்.

இந்த லிஸ்டில் கோவில்கள் நிச்சயமாக இருக்காது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்கான காரணம் வெளிநாட்டு மோகம்.
கோவாவின் புராணப்பெயர் கோமந்தக க்ஷேத்திரம். இந்து சமயம் தழைத்தோங்கி இருந்த இடம், அன்றைய காஷ்மீர் மாதிரி. அங்கே பல கோவில்கள் இருந்தன. வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அதாவது, 1510-ல் போர்த்துக்கீசியர் கோவாவை ஆக்கிரமிக்கும் வரை. போர்ச்சுக்கீசியர் காலத்து கோவாவின் சரித்திரம் மட்டுமே பள்ளிகளில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. கோவாவின் பழைய சரித்திரம் நம்மிடமிருந்து அடியோடு மறைக்கப்பட்டது.

இதுவும் சில கட்சியின் ஒரு அரசியல் தந்திரம் தான். கட்சியை மட்டும் ஏன் குறை கூறவேண்டும்? நாமும் தான் கோவாவின் பண்டைய சரித்திரம் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை படவில்லையே?

போர்ச்சுகீசியர் அங்குள்ள கோவில்களை இடித்துத் தள்ளினார்கள். மக்களை கிறிஸ்தவத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றினார்கள். மதம் மாற மறுத்தவர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை. உயிருடன் இருப்பதே கடினமாகியது. பயத்திலேயே வாழ வேண்டியதாயிற்று, உதாரணமாக சொல்லப் போனால் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஹிந்துக்களின் நிலையைப் போல.

பலர் மதம் மாறினார்கள். உயிருடன் இருக்க வேண்டுமே? மதம் மாற விரும்பாதவர்கள் கிறிஸ்துவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஓடிவிட்டனர். எங்கெல்லாம் இந்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனரோ அங்கெல்லாம் அவர்கள் தஞ்சமடைந்தனர். இதில் பல குடும்பங்கள் அடக்கம். தாங்கள் ஆண்டாண்டு காலமாய் வழிபடும் கோவில் விக்ரகங்களைப் பெயர்த்து எடுத்து, மாட்டு வண்டிகளில் மறைத்து வைத்து, இரவோடு இரவாக வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டனர். பழைய இந்து சமய பாரம்பரியத்தின் பெருமை சிதிலமான கோவில்களாக அங்கே காட்சி அளித்தது.

குடிபெயர்ந்த குடும்பங்களில் பல, டிசம்பர் 1961ல் கோவா இந்தியாவுடன் இணைந்த பிறகு மீண்டும் கோவாவிற்கு இடம் பெயர்ந்தனர். சிதிலமான கோவில்களைப் புனரமைத்தனர். பழைய விக்கிரகங்களை ஆகம விதிகளின்படி மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். எல்லாக் கோவில்களிலும் மிகச்சிறப்பாக பூஜை மற்றும் பல்வேறு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

அது மட்டுமல்ல, பல இடிந்த கோவில்கள் புதியதாகக் கட்டப்பட்டன. பொதுமக்களின் பொருளுதவியுடன் பிரம்மாண்டமான தோற்றம் உடையவையாக மாற்றப்பட்டன. எல்லா கோவில்களிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. தரிசனம் செய்ய வருபவர்கள் ஹோட்டலில் தங்க அவசியமில்லை.

கோவாவிலுள்ள இந்துக் கோவில்களைப் பற்றி இன்னும் நம் நாட்டு மக்களுக்கு அதிகம் தெரியாததற்குக் காரணம், மத்திய, மாநில அரசுகள் கோவில்களைச் சுற்றுலாத் தளங்களாக விளம்பரப் படுத்தாதது தான். சுற்றுலாத் தளங்களாக அறிவிக்க இவை தகுதி இல்லாதவை என்று நினைத்து விட்டனர் போலும்.
இன்றும் கோவா சுற்றுலா பீச்சுகள், சர்ச்சுகள், போர்ச்சுகீசிய கட்டிடங்கள், முந்திரி பருப்பு, ஃபென்னி போன்றவைகளை நம்பித்தான் இருக்கிறது. அடுத்த முறை கோவா சென்றால் பீச், சர்ச் என்று எல்லாவற்றையும் பாருங்கள். கூடவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள பழைய இந்துக் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யுங்கள்.

1. Mahalasa Narayani (மஹாலச நாராயணி கோயில்)

2. Shanta Durga ( local diety) (சாந்த துர்கா கோயில்)

3. Nageshi Maha Rudra (நாகேஷி மகா ருத்ரர் கோயில்)

4. Mangueshi Shiv temple (மன் குஷி சிவன் கோவில்)

5. Saptakoteshwar (சப்தகோடீஸ்வரர் ஆலயம்)

6. Surla Mahadev Mandir (சுருள மஹாதேவ் மந்திர்)

பண்டைய வரலாறு கொண்ட இந்தக் கோவில்களில் சுற்றுலாப் பயணிகள் யாருமே வருவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here