உலகம் குரோனா பிடியில் இருந்து தப்பிக்க திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்.

0
259

குரோனா உலகம் முழுக்க பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்த திருவண்ணாமலையில் பெண் ஒருவர் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையை அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் பீமாவரம் பகுதியை சேர்ந்த கனுமுரி (45) ரமணமகரிஷி மீதுள்ள பற்றும், நாயன்மார்களின் வரலாறும் வெகுவாக கவர அந்த அம்மையார் திருவண்ணாமலை பக்கம் திரும்பி உள்ளார்.

கடந்த 15 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வசித்து கொண்டு பெரிய புராணம், நாயன்மார்கள் வரலாற்றை தனது தாய்மொழியில் மொழி பெயர்த்து அனைவரும் பயன்பெறும் வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது அம்மையார் உலகம் குரோனோ பிடியில் இருந்து விடுபட கிரிவல பாதையான 14 கி.மீ சுற்றினை முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். இதுமாதியான தன்னலமற்ற செயல்கள் செய்பவர்கள் ஏராளம் ஏராளம்.

ஓம் நமச்சியவாய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here