ஒலிம்பிக்கில் முதன் முதலில் பதக்கம் வென்று பாரதத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கணை கர்ணம் மல்லேஸ்வரியை டெல்லி விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தராக நியமித்தது பாஜக அரசு!
தகுதியானவர்களுக்கு தகுதியானதை கொடுத்து வருவதில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு நிகர் யாவரும் இல்லை. எடுத்துகாட்டாக அஜித்தோவல் அவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு துறையின் ஆலோசகராக நியமித்ததையும் சொல்லலாம். தகுதியானவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நீட் தேர்வு கொண்டு வந்ததையும் சொல்லலாம். இதுபோன்று மேலும் அடுக்கி கொண்டே போகலாம்.
தற்போது பாரத நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பெருமை கர்ணம் மல்லேஸ்வரியை சாரும். அவருக்கு பாரத பேரரசு 1994ம் ஆண்டு அர்ஜுனா விருது, 1999ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, மற்றும் பத்மா ஸ்ரீ விருது என கொடுத்து கௌரவப்பத்தியது. தற்போது அவர் உணவு
தலைமை பொது மேலாளராக இந்திய உணவுக் கழகத்தில் உள்ளார். அவரை தற்போது டெல்லி விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தராக நியமித்தது மோடியின் தலைமயிலான பாரத பேரரசு.