பாஜக தலைமையிலான அஸ்ஸாம் அரசு முதல்வராக ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராக இருந்து வருகிறார். பதவியேற்ற நாளிலிருந்து மக்களுக்கான நலனில் அக்கறை செலுத்தி வருகிறார்.
அஸ்ஸாம் சட்டமன்ற கூட்டத்தொடர் 24 ம் தேதி நடைபெற்றது. சட்டமன்றத்தில் இதுவரை நடந்த தனிமனிதர் ஒருவரை கௌரவிப்பது இதுவே முதல் முறையாகும்.
போர்சிங்பே என்பவர் ஹோம் கார்டாக வேலைபார்த்து வருகிறார்.. சமீபத்தில் 12 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.
அந்த கடத்தல் கும்பல் இவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தும், இவர் தேசநலனை கருத்தில் கொண்டு மறுத்தது மட்டுமல்லாமல். காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்துள்ளார்.
அதானல் போர்சிங்பேவை கௌரவபடுத்தும் விதமாக, ஹோம் கார்டாக இருந்த போர்சிங்பேவை அஸ்ஸாம் காவல்துறையில் கான்ஸ்டபிளாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா நியமித்தார்.