அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் அமைவதால் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மேன்பாடு பற்றி பிரதமரும், முதல்வரும் ஆலோசனை.
அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அயோத்திக் பேருந்து சேவை துவங்குவது, நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அயோத்தி வருவதற்கு விமான மற்றும் ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு ஆயிரம் கோடி ரூபாயும், மத்திய அரசு 240 கோடி ரூபாயும் ஒதுக்கி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அயோத்தி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து, பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினர்.