மேகதாது அணையின் விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை கர்நாடகாவுக்கு கௌரவம் இல்லை. – டி.கே. சிவகுமார்

0
246

மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசு தமிழக முதல்வருடன் சமாதான பேச்சுக்கு செல்வது நம் மாநிலத்துக்கு கௌரவம் இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.


மங்களூரில் அவர் நேற்று கூறியதாவது: மேகதாது அணை திட்டத்துக்கு உடனடியாக டெண்டர் அழைத்து பணிகளை துவங்க வேண்டும். மேகதாது திட்டப்பணிகளை துவங்குவதை விட்டு தமிழகத்துடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியமென்ன. எனவும் காங்கிரஸ் அரசு இருந்த போது திட்டம் வகுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அது நம் திட்டம். மேகதாது விஷயத்தில் முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். சமாதான பேச்சுக்கு செல்வது நம் மாநிலத்துக்கு கௌரவம் தரக்கூடியதல்ல. என தெரிவித்து உள்ளது சர்சையாகி உள்ளது.

மேலும் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here