புதிய தேசிய கல்விக் கொள்கையை உரிய காலத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

1
205

புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை உரிய காலத்தில் அடைவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.


புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் டெல்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறையின் இணை அமைச்சா்கள் ராஜ்குமார் ரஞ்சன் சிங், சுபாஷ் சேகா், அன்னபூா்ணா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனா். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பலர் கூட்டத்தில் பங்கேற்றனா்.

நீட் தேர்வு ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை – விழிபிதுங்கும் திமுக அரசு.

கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நாட்டில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 30 கோடிக்கும் அதிகமான மாணவா்களின் எதிர்காலத்தை வளமாக்குவது தொடா்பாக கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள நோக்கங்களை உரிய காலத்தில் அடைவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. தொழிற்புரட்சி 4.0-வில் இந்தியா முக்கியப் பங்கை வகிக்க உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here