அசாம் மாநிலத்தில் பாஜக ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் அசாம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதா நிறைவேற்றியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் அசாம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான புதிய மசோதாவில் இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கால்நடைகளை கொல்வது மற்றும் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் புதிய மசோதாவில் அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021-ன் கீழ் ஒரு கோயிலின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த மசோதாவில் முறையான ஆவணங்கள் இன்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், அசாமுக்கு வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வது சட்டவிரோதமாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.