”தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலையில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது: தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில், தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும் என பேசினார்.