தெலுங்கான மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு லஞ்சம் வாங்கி தான் நியமித்தார் விருதுநகர் எம்பி மாணிக்க தாகூர் – காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயலாளர் கவுசிக் ரெட்டி.

0
253

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பதவியில் ரேவந்த் ரெட்டியை நியமிக்க அம்மாநில பொறுப்பாளரான விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ரூ.50 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்” என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயலாளர் கவுசிக் ரெட்டி குற்றம்சாட்டினார்.


தெலுங்கானாவில் உள்ள கூசூராபாத் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி தனக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக காங்., செயலாளர் கவுசிக் ரெட்டி அலைபேசியில் பேசியது போன்ற ஆடியோ வெளியானது. இதுபற்றி 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்கும்படி காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவுசிக் ரெட்டி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் ரூ.50 கோடி கொடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ரேவந்த் ரெட்டி பெற்றுள்ளார் என கவுசிக் ரெட்டி குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here