அயோத்தி ஸ்ரீராமர் கோவில் 2023ம் ஆண்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் – ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை.

1
469

அயோத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீ ராமர் கோவில் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பக்தர்களுக்காக வழிபாட்டுக்கு திறக்கப்படும் என ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் என தெரிவித்தார்.


ராம் மந்திர் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள், 70 ஏக்கர் வளாகத்தின் முழு கட்டுமானமும் 2025 இறுதிக்குள் முடிவடையும் என்று கூறினார்.

ஆகஸ்ட் 5, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு வரலாற்று விழாவில் கோயிலுக்கு அடித்தளம் அமைத்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலின் பூமி பூஜையை நிகழ்த்திய போது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களின் 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

பொறியியலாளர்கள் உ.பி.யின் மிர்சாபூர் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து மணற்கல் மற்றும் ராஜஸ்தானின் மக்ரானாவிலிருந்து பளிங்கு மற்றும் ராஜஸ்தானின் பன்சி பஹார்பூரில் இருந்து இளஞ்சிவப்பு கல் ஆகியவற்றை கோயில் கட்டுமானத்திற்காக பயன்படுத்துகின்றனர். தீபாவளிக்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பரில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும் எதிர்பார்க்கபடுகிறது. கோவில் முழுவடிவம் பெற்று 2023 ஆம் ஆண்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என அறிவித்து உள்ளார்கள்.

1 COMMENT

  1. Hello! This is kind of off topic but I need
    some guidance from an established blog. Is it difficult to set up your own blog?
    I’m not very techincal but I can figure things out
    pretty quick. I’m thinking about making my own but
    I’m not sure where to begin. Do you have any points or suggestions?
    Thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here