சீக்கியர் கணவரை மதம் மாற கட்டாயபடுத்தும் முஸ்லிம் மனைவி.

0
227

மனைவி முஸ்லிம் நான் சீக்கியர் என்பதால் என்னை மதம் மாற்ற முயற்சித்து முடியவில்லை என்பதால் கொடுமை செய்து வருகின்றனர். என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார் சண்டிகர் சீக்கியர்.


சீக்கியர் ஒருவர் சண்டிகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: சண்டிகரில் 2008ல் ஒரு நகைக் கடையில் மேலாளராக வேலை பார்த்தேன். அப்போது அந்த கடையில் பணிபுரிந்த பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அவர் முஸ்லிம் என்பதால் திருமணத்துக்கு மறுத்தேன். ஆனால் அந்த பெண், உங்களின் மத நம்பிக்கையில் ஒரு போதும் குறுக்கிடமாட்டேன் என உறுதியளித்தார். அதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் அவரது பெற்றோரும் என்னை முஸ்லிமாக மதம் மாற கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இருவருக்கும் 2012ல் மகன் பிறந்தான். அவனை சீக்கியராக வளர்க்க விரும்புகிறேன். ஆனால் அவனையும் மதம் மாற்ற கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் தினமும் தகராறு ஏற்படுகிறது. மதம் மாற மறுப்பதால் என்னை என் மாமனார் மாமியார் மிகவும் அவமானப்படுத்துகின்றனர். என்னை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சிக்கும் மனைவி மாமனார் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here