உலகில் கிறிஸ்தவர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுக்காத போது மண்டைகாடு கலவரத்திற்க்காக கொடுக்கும் காரணம் என்ன? அதனுடைய பின்புலம் விசாரிக்க வேண்டும் – இந்து முன்னணி ஜெயக்குமார் கோரிக்கை.

1
486

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின் அன்றைய மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் அறிக்கையில் கலவரத்திற்கு காரணம் சட்டவிரோத சர்ச் மற்றும் திடீர் ஜெபகூடங்கள் என்று தெளிவாக உள்ளது.

இதனடிப்படையில் சட்டவிரோதமாக அமைத்த வழிபாட்டு தலத்தை மாவட்ட நிர்வாகம் தடை செய்தது… இதில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரிமை பறிக்க படுவதாக போராட்டம் நடத்தும் இஸ்லாமிய அமைப்புக்கள்
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இந்த இஸ்லாமிய அமைப்புக்கள் போராடாதது ஏன்?

No photo description available.
போராட்டம் செய்த முஸ்லிம் அமைப்பின் செய்தி

இலங்கையில் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவ சர்ச்கள் குண்டு வைத்து நகர்த்த போது கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இந்த இஸ்லாமிய அமைப்புக்கள் போராடாதது ஏன்?

உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் நடத்தாத இஸ்லாமிய அமைப்புக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கிறிவர்களுக்கு ஆதரவாக இந்துக்களை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றன.

மத்திய, மாநில உளவு பிரிவுகள் இந்த போராட்டத்தின் பின்புலம் பற்றியும், கலந்து கொண்ட நபர்கள் பற்றியும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

வி.பி.ஜெயக்குமார்
இந்துமுன்னணி, மாநில துணைத்தலைவர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here