வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மசூதி பாதைக்காக ஒதுக்கீடு: இந்து முன்னணி குற்றச்சாட்டு.

1
288

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றசாட்டு.


சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. சென்னை சாலிகிராமம் மஜீத் நகரில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சிலரால் வாகனங்கள் நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் அண்மையில் இந்த நிலம் மீட்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க, நிலத்தைச் சுற்றி இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அருகில் உள்ள மசூதிக்கு செல்லும் பாதைக்காக வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து சுமார் 1,600 சதுரஅடி இடத்தை வழங்கியுள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here